search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலர் தேர்வு"

    • சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் காவலர் பணிக்கான தேர்வை எழுதினார்கள்.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற காவலர் தேர்வில் 7,042 பேர் பங்கேற்றனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வை பல்லாயிரக்கணக்கானோர் எழுதுகின்றனர்.

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. அதில் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 780 பெண்களுக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை ஆண் காவலர் பணியிடங்களில் 1819 ஆண்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களில் ஆண்களுக்கு 83 இடங்களும் பெண்களுக்கு 3 இடங்களும், தீயணைப்பாளர் பணியிடங்களில் 674 ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.

    இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 10-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினார்கள்.

    சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் காவலர் பணிக்கான தேர்வை எழுதினார்கள். இதில் 9,868 பேர் ஆண்கள், 2435 பேர் பெண்கள் ஆவர்.

    செல்போன், டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள் ளிட்ட எலக்ட்ரானிக் உப கரணங்களை தேர்வர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்களை போலீசார் அனுமதித்தனர்.

    இந்த தேர்வானது காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் 8.30 மணிக்கு தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதன்படி காலையிலேயே தேர்வு மையங்கள் முன்பு வாலிபர்களும் இளம்பெண்களும் கூடியிருந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 மையங்களில் நடைபெற்ற காவலர் தேர்வில் 7,042 பேர் பங்கேற்றனர். திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி, காக்களூரில் உள்ள சி.சி.சி. மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆர்.எம்.கே.கல்லூரி, வேலம்மாள் பள்ளி டி.ஜெ.எஸ்.கல்லூரியிலும் தேர்வு நடைபெற்றது.

    இதில் பெண்கள் 1,311 பேரும், ஆண்கள் 5,731 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    • காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (புதன்கிழமை) தொடங் குகிறது.இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடித்தேர்வு 2023 பதவிளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த காலிபணியிடங்கள் 3,359. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த நேரடித்தேர்விற்கு கடந்த 18-ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். இந்த போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை முதல் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 04343 - 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த நபர்கள், இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
    • கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண் ணம் தன்னார்வ பயிலகம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலகத் தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 3,359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப் பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். இதற் கான தேர்வுகட்டணம் ரூ.250 ஆகும்.

    இப்போட்டி த்தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலா கவும் அல்லது 7867080168 என்ற அலைபேசியின் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது.
    • திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, பார்வதீஸ், ஜி.டி.என், என்.பி.ஆர், எஸ்.எஸ்.எம் கல்லூரிகளிலும், அவர்லேடி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது புகைப்படம் ஒட்டிய நுழைவுசீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் உரிய நேரத்தில் அடையாள அட்டையுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

    கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை எழுதுபொருள் மற்றும் நுழைவுச்சீட்டு, எழுதுஅட்டை இவைகளை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டது.

    தேர்தல் பார்வையாளர், தொழில்நுட்ப காவல்துறை தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    நுழைவு சீட்டு மற்றும் பேனா மட்டுமே அனுமதிக்கப்பட்டது. டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. முககவசத்திற்கும் தடை விதிக்கப்பட்டதால் தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள் முககவசத்தை அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் தேர்வு மையத்திற்கு செல்லும் முன்பு முககவசத்தை அகற்றி சென்றனர்.

    தேனி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 9432 ஆண்கள், 1300 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 10,733 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    • 4 கல்லூரிகளில் எஸ்.பி. ஆய்வு
    • தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவுகளை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் வருகிற 27-ந் தேதி காவலர் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு மையங்களாக மருத கேசரி மகளிர் ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு மையங்களை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது அங்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும், குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவுகளை பிறப்பித்தார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • விருதுநகரில் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்வுக்கு விண்ண ப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)விருதுநகர் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதி க்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு 20-ந் தேதி நடக்கிறது.
    • தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 2-ம் நிலைக் காவலர் 3552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருது நகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச மாதிரி தேர்வு வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

    பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது TNUSRB PC தேர்விற்கான விண்ணப்ப படிவத்தின் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு பால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

    இதுகுறித்து செல்போன் எண். 04562-293613 மற்றும் onlineclassvnr@gmail.com-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    ×